இலங்கையின் தமிழ் அரசு கொசோவாவை ஒத்த தனிநாடாகவே அமையும்.
By admin at 6 July, 2010, 4:07 pm
Vheadline’s Kenneth T Tellis அவர்களால் ஆங்கிலத்தில் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் தமிழாக்கம் கீழே உள்ளது. இக்கட்டுரை முள்ளிவாள்க்கால் படுகொலைகள் ஆரம்பமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தமிழீழத்தை கொசவாவுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் இணையத் தளத்தில் ஆங்கிலக் கட்டுரை உள்ளது. வாசகர்களுக்குத் தேவைக்கதிகம் என்று கருதிய சில வரிகள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தமிழ் அரசு கொசொவாவை ஒத்த ஒன்றாகவே அமையும்
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையின் சிங்கள அரசினால் பயங்கரவாதி என்று அழைக்கப் படுகிறார். இக்கூற்றை ஏற்கும் பல நாடுகளும் அப்படி அழைக்கின்றன. யாரறிவார் இன்றைய பயங்கரவாதியாகக் கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கைத் தீவில் அமையும் தமிழ் அரசின் தலைவராகவும் உலகினால் போற்றப்படக் கூடும்.
யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா, இஸ்ரேலின் ஏரியல் சரண், மெனாசிம் பேகன் ஆகியோர் பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் என்பதை. அவைபற்றி இப்போ பேசப்படுவது இல்லை. இந்தோனிசியாவின் சுகார்னோ, சைபிரசின் பேராயர் மக்காரியோஸ், அயர்லாந்தின் ஏமன் டிவலெரா, இந்தியாவின் பண்டிதர் நேரு, பாலஸ்தினத்தின் யசிர் அரபாத், சிம்பாவேயின் றொபேட் முகபே, தென் ஆபிரிக்காவின் தபோ ம்பெக்கி, ஆகியோரும் ஒரு காலத்தைய பயங்கரவாதிகள். அமெரிக்கப் புரட்சியின்போது போராடிய நாட்டுப் பற்றாளர்கள் ஜோர்ச் வாசிங்ரன், தோமஸ் ஜெபர்சன், பெஞ்சமின் பிராங்கிலி;ன் அகியோரைவிட இ;ன்னும் பலபேர் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர் உலகத் தலைவர்களானார்கள். இதில் இப்போ எவருமே பயங்கரவாதிகள் பட்டியலில் அடக்கக்கூடியவர்களாக இல்லை. இவர்கள் எல்லாம் சலவையில் போட்டு சுத்திகரிக்கப் பட்டு விட்டார்களோ தெரியவில்லை.
இன்று வட அயாலாந்தின் அல்ஸ்ரர் யூனியனிஸ்ற்ரினருக்கும் சின் பெயின் கட்சியினருக்கும் பயங்கரவாதிகள் என்று அழைக்கப் பட்ட அக்கட்சியின் படைப்பிரிவான ஐஅர்ஏ யையும் உள்ளடக்கி ஒரு சமாதனத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கின்றது. நாளை வட அயர்லாந்தின் எதிர்கால அரசு பயங்கரவாதிகள் என அழைக்கப்படும் ஐஅர்ஏ யை உள்ளடக்கியதாகவும் அமையலாம். அப்படி அமையும் ஒருங்கிணைந்த ஆட்சியல் அங்கமாகும் ஐஅர்ஏ யை பயங்கரவாதிகள் என்று அழைக்க எவருக்கும் அப்போ துணிச்சல் வராது. நேற்றைய பயங்கரவாதிகள் இன்றைய அரசியல்வாதிகள் ஆவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
பயங்கரவாதிகள் என்று அழைக்கப் படுபவர்களது நோக்கத்திற்கு ஒரு மதிப்பு வழங்கப்பட வேண்டும். பல நாடுகளினதும் நாட்டுப் பற்றாளர்கள் பிறநாட்டு ஆக்கிமிப்பாளர்களை வெளியேற்ற பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். ஒஸ்றிய, பிரஷ்யா (முன்னைய ஜெர்மனி), ருஷ்சிய ஆகிய நாடுகள் சேர்நது 1795ல் கூட்டாக போலந்து நாட்டை இல்லாது செய்ய முயன்றன. தங்களுக்குள் ஒப்பந்தமிட்டு போலந்தைத் துண்டாடி தங்களுடன் இணைத்துக் கொண்டன. காலப்போக்கில் அடையாளமிழந்து போலந்து என்ற நாடு இல்லாது போய்விடும் என்று எண்ணின. ஆனால் அவர்கள் தரம் குன்றிய சிந்தனையின் திட்டம் நிறைவேறவில்லை. தனது துயர்நிறை நாட்களில்கூட இரு குடிமக்களை போலந்து அமெரிக்கப் புரட்சிக்கு அர்ப்பணித்துள்ளது. முலாவது உலக யுத்தத்தின் பின் சாம்பலிலில் இருந்து போலந்து என்னும் பீனிக்ஸ் பறவை மீண்டும் எழுந்தது. அழிக்க முயன்ற நாடுகளால் அதை அழிக்க முடியவில்லை. மீண்டும் 1930க்களில் சோவியத்தும் நாசிகளும் சேர்ந்து போலந்தை உலகப் படத்திலிருந்து இல்லாதொழிக்கப் புதிய திட்டம் வகுத்தன. இரண்டாவது உலகப் போருக்கு முன்னோடிகளில் ஒன்றாக அமைந்த இத்திட்மும் நிறைவேறவில்லை. இரண்டாவது உலகப் போருக்குப் பின் போலந்து தன்னை ஒருநாடாக உருவாக்க முயலும்போது அமெரிக்காவால் சோவியத் ஒன்றியத்திற்கு விற்கப் பட்டது. இதன் விளைவு 1944ல் இலப்லினில் ஒரு பொம்மைப் பொலிஷ் அரசு நிறுவப்பட்டது. அச்செயலுக்கு வலுவூட்ட ஜிப்ரோல்டரில் நாடுகடந்து வாழ்ந்த போலந்து ஜனாதிபதி ஜெனரல் சிக்கோஸ்கி அதே ஆண்டு சோவியத் அமெரிக்கக் கூட்டில் படுகொலை செய்யப்பட்டார். ஆக்கிகிரமித்தலும் இணைத்தலும் புதிய கதைகள் அல்ல. கஷ்மீரும் திபேத்தும் புதிய தளத்தில் திரும்ப ஆடப்படும் போலந்து ஒதடத ஒரு நிகழவே. இரண்டுமே இனச் சுத்திகரிப்பு அடிப்படையில் நிகழ்பவை. கோசோவாவில் ஐ நா நடத்திய நடவடிக்கையை ஒத்த நடவடிக்கை மூலமே இலங்கையிலும் கொசொவாவை ஒத்த நாட்டை நிலைப்படுத்தலாம்.
எல்லாமே ஒன்றுதான். இன்று பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ள இந்த ஆட்கள் ஒரு காலத்தில் அதுவும் வெகு விரைவில் கஷ்மீர், தீபேத்து, தமிழ் ஈழம் ஆகிய முன்று சுதந்திர நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஆவார்கள். 1956ல் தங்கள்நாட்டை ஆக்கிரமித்த சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பது எவ்வளவு தவறோ அதேயளவு தவறுதான் கஷ்மீர், தீபெத்து, இலங்கை ஆகிய நாடுகளின் விடுலைப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பது. அமெரிக்காவால் பயிற்சி அளிகப்பட்டு சோவியத் படையை ஆப்கானிஸ்தானில் முறியடைத்த ஆப்கானிதானிய முஜாடீன் (தலிபான்) விடுதலைப் போராளிகளும் பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். வழமையைப்போல ஒரே மக்களை அழைக்க எமக்கு இரு பெயர்கள் உள்ளன. ஆக்கிரமிக்கும் அந்நியப் படைகளுக்கு அவர்கள் பயங்கரவாதிகள். ஆனால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நாட்டின் மக்களுக்கு அவர்கள் விடுதலைப் போராளிகள். உண்மையில் இது நோக்கும் வித மாறுபாடுதான். இந்த விடுதலைப் போராளிகள் நூற்றாண்டுகளுக்கு முன் ஒஸ்றியாவின் சுவிற்சலாந்திய ஆக்கிரமிப்புக்கு வில்ஹெல்ரெல் செய்த அதையே செய்கிறார்கள். வரலாற்றில் யாரும் அவரைப் பயங்கரவாதி என்று அழைக்கவில்லையே. ஏன் கஷ்மீரிய, தீபேத்திய, தமிழ் போராளிகளை பிரித்துப் பயங்கரவாதிகள் என்கிறார்கள். கஷ்மீரும் தீபேத்தும் தமிழ் ஈழமும் சுயநிர்ணய உரிமை கொண்டவை.
பெரிய நாடுகளும் அவர்ளின் அடிவருடிகளும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. இது களத்து உண்மை. அதன் பெறுமதியை உணர்ந்து நாம் அதை ஏற்கவேண்டும். இதுவரை 46,000 வரையிலான கஷ்மீரிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அங்கு ஆக்கிரமித்துள்ள இந்தியப் படைகளால் சித்திவைதைக்கு உள்ளாகியும், கொல்லப்பட்டும் பாலியல் வல்உறவுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளார்கள். படைகளின் எண்ணிக்கை இப்பொழுது 546,000 வரை உயர்ந்து விட்டது. தீபேத்தைப் பொறுத்த மட்டில் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை அளவு புரியாத ஒன்றாகி விட்டது. இலங்கையில் கொன்று குவிப்பு தொடர்கிறது. தீபேத்தில் நிலைகொண்டுள்ள ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராகப் போரிடும் கம்ப இன மக்களை சீனா பயங்கரவாதிகள் என்கிறது. ஆனால் அவர்கள் நாட்டுப் பற்றாளர் வகையில் இம்மியும் குறைந்தவர்கள் இல்லை. அவர்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் சீனப் படைகள் வைத்திருக்கும் மிக வலுக்கொண்ட ஆயுதங்களை எதிர்த்துப் போரிட்டுள்ளார்கள். இன்று இலங்கையில் நடக்கும் போரில் விடுதலை கேட்கும் ஒரு மக்கள் படை தங்களைப்போல் 20 மடங்குகளுக்கு மேல் எண்ணிக்கையில் உள்ள படைகளை முன்னேறாது தாக்குப் பிடிக்கிறது. உலகம் ஒதுங்கி நின்று நவகாலணித்துவ சக்கிகள் ஆக்கிரமிப்புப் பகுதியில் நடாத்தும் படுகொலை, பாலியல் வல்லுறவு போன்றவற்றை பார்த்துக் கொண்டிருந்துள்ளது.
நவகாலணித்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கிறிஸ்தவப் பகுதியான கிழக்குத் தீமோர். 25 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த இந்தோனிசியப் படைகள் கிழக்கு திமோரிய மக்களை தங்கள் விருப்பப்படி கொன்று குதறினர். அவார்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்புச் சுடர் சனான கஸ்மாவோ தலைமையில் நாட்டில் நிலைகொண்டிருந்த இந்தோனிசிப் படைகளுடன் போராடிய விடுதபை; படைகளே. அவர்கள் பயங்கரவாதிகளாக இந்தோனிசியாவால் சித்தரிக்கப் பட்டார்கள். அண்மையில்தான் அந்த மக்கள் ஐ நா வால் இந்தோனிசிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கப் பட்டார்கள். 1963ல் எற்பட்ட கென்னடிய நிர்வாக உடன்பாட்டின் ஒரு அங்கமாக 1964ல் கிறிஸ்தவ மேற்கு நியுகினியா, இந்தேனிசியாவிடம் கையளிக்கப் பட்டது. எப்பவுமே இந்தோனியாவின் அங்கமாக இல்லாதிருந்த நியுகினியா அதற்கு இருந்த இறையாண்மையை மீள் நிலைநாட்டி 1963 டிசெம்பர் முதலாம் திகதி தனி நாடாக மாறியது. அந்த மீள் நிலைநாட்டுப் பணிக்காகலே சுதந்திர ஆதரவுப் பிரிவின் தலைவர் தேஸ் எலுவே தன் உயிரையும் இழந்தார். அதன் தேசிய மக்கள் சபை இந்தோனிநியவிடம் கையளிப்பதை எதிர்த்தது. எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய சபையை அமெரிக்கா அங்கிகரிக்க மறுத்த சூழலில் இது நிகழ்ந்தது. கிறிஸ்தவப் பகுதியான அந்த மொலுக்காஸ் தீவுகள் இன்னும் இந்தோனிசிய அடக்கு முறையிலிருந்து விடுபட வேண்டிய நிலையிலேயே உள்ளன. விடுபடும் நாள் விரைவில் வரும்
இதை இவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை என்று நேரடியாக நாம் சொல்லத் தேவையில்லை. பாசாங்கு வேலைகளும் பாரபட்ச வேலைகளும் வெளிக்குகத் தெரியாமலே நடக்கின்றன. காரணம் பாரிய ஆதிக்க சக்திகள் பின்னணியில் உள்ளன. ஆனால் மக்கள் ஆட்சி உரிமை சரி சமனாக எல்லோருக்கும் உள்ளதால் உலகில் எவருமே வேறு எவருக்காகவும் இன்னொருவரினது சுதந்திரத்திற்காக தரகு வேலை பார்க்க முடியாது. இதில் விதி விலக்கும் கிடையாது.
நிலைகொண்டிருக்கம் அந்நியப் படைகள் விலகுவதன் மூலம் கஷ்மீர், தபேத்து, தமிழ் ஈழம் ஆகியவற்றின் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கலாம். இதற்கு சீனா தனது படைகளை தீபேத்திலிருந்தும் கஷ்மீரின் ஒரு பகுதியிலிருந்தும் தரும்பப் பெற இணங்க வேண்டும். அதேபோற் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் இணங்க வேண்டும். இதே வழியைப் பின்பற்றி இலங்கையும் பின்பற்றி தனது படைகளை த் தமிழ்ப் பகுதிகளிலிருந்து விலக்க வேண்டும். தீபேத்தியரையும் க்மீரியரையும் தமிழர்களையும் அவர்கள் பிரச்சனையை அவர்களையே தீர்க்க வடவெண்டும். அமைதியான உலகை நாம் காணலாம். சீனா தீபேத்தையும் கஷ்மீரின் ஒரு பகுதியையும் கோருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் கஷ்மீகை; கோருகின்றன. இலங்கை பிரதேச விரிவாக்கப் பேராசையினதும் படை வலுவினதும் அடிப்படையில் கோருகிறது. இவை எவ்வித சட்டபூர்வத் தகைமையும் அற்ற நிலையில், காட்டுத் தர்பார் முறையைக் கடைப் பிடிக்கின்றன. தீபேத்து தீபேத்தியருக்கு மட்டுமே, கஷ்மீர் கஷ்மீரியருக்கே. தமிழ் ஈழம் தமிழருக்கே. ஏந்த வெளிநாட்டுச் சக்தியும் அவர்கள் உள்நாட்டு விவகாரத்தில் அதிகார ஆணையிட முடியாது.
இறுதியாக ஒரு பயங்கரவாதி விடுதலைப் போராளியா என்பதையும் ஒரு விடுதலைப் போராளி பயங்கரவாதியா என்பதையும் யார் தீர்ப்புக் கூறுவது? இது நிச்சயம் நாங்கள் காணும் வளைந்து கொடுக்கும் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது.
இக்கட்டுரையை எந்தக் கோணத்திலிரந்து பார்த்தாலும் தப்பெண்ணம் ஏற்படுத்தாத வகையில் உள்ளதை உள்ளபடியே கூறி நீதியானதும் நேர்மையானதுமான ஒரு கருத்து உருவாகவேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்து எழுதி உள்ளேன். ஊண்மையைச் சொல்லும்போது கண்டனத்துக்கு உள்ளானால் அது அப்படியே இருக்கட்டும். உண்மை எவரினது அரசியல் நிகழ்வுக்கு ஏற்ப மாறும் ஒன்று இல்லை.
No comments yet.