தமிழ் தலைவரையும் போராளிகளையும் எங்கள் உறவுகளையும் காப்பாற்ற அறைகூவல்.
By admin at 17 September, 2009, 10:38 am
மாண்புமிகு கோடன் பிறவுண்
தலைமை அமைச்சர்
10 Downing Street
London,
SW1A 2AA
ஞாயிறு, 03 மே 2009
மாண்புமிகு ஐயா,
தமிழ் தலைவரையும் போராளிகளையும் எங்கள் உறவுகளையும் காப்பாற்ற அறைகூவல்.
இந்த இக்கட்டான இறுதிக்கட்ட நேர மனுவை தயவுசெய்து மிகவும் அவசியமானதாகவும் உடன் உரிய நடவடிக்கைக்கு வேண்டியதாகவும் கொள்ளவும். பிரித்தானியாவில் இடம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்களில் அநேகர் அடங்கிய ஷேட்; என்னும் அமைப்பைச் சார்ந்;தவர்களாகிய நாம் முல்லைத்தீவின் கோர நிலை குறித்து மிகவும் கவனம் கொண்டுள்ளோம். அங்கு இலங்கைப் படையினர் போராளிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் போராளிகளுக்கு ஆதரவான அப்பாவிப் பொதுமக்களையும் அழித்துத் துடைக்கும் நிவையில் உள்ளார்கள். இவை யாவும் அரசு தனது பொய்ப் பிரசாரங்களினால் உலகை ஏமாற்றிய சூழலிலேயே நடைபெறுவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
,து சரி பிழை பேசும் தருணம் அல்ல. இந்த திடமற்ற நிவையில் வலுவான நடவடிக்கை வேண்டுமென்றும் அதுவம் நீதியான சரியான செயலாக அமைய வேண்டுமென்றும் கருதுகிறோம், முரன் நிகழ்வால் அல்லலுறும் நாம் அனைவரும் மாண்புமிகு தலைமை அமைச்சர் கோடன் பிறவுண் தன்னை உலகுக்கு தான் ஒரு சிறந்த அரசியல் மேதை என்பதைக் காட்டுவார் என்று உறுதியாக நம்புகின்றோம். தங்களுக்கு அப்படிக் காட்ட இது ஒரு நேர்தியான சந்தர்ப்பழ்.
நாங்கள் பிரித்தானிய அரசுக்கும் அந்நாட்டின் உயர் உள்ளம் படைத்த மக்களுக்கும் அவர்கள் ,வ்வளவு ஆண்டுகளாக எங்களுக்கு அளித்த பாதுகாப்பிற்கும் இங்கு வாழ அனுமதித்து எங்கள் செயற்பாட்டுக்களைபொறுத்தமைக்கும் நன்றிக் கடன் உள்ளவர்கள். எங்கள் விருப்பு எல்லாம் எங்கள் தாயகம் விடுதலை பெறவேண்டும் நாங்களும் அங்கு அவர்களுடன் சேர்ந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே.
பொதுவாகவே தமிழராகிய நாம் எங்களைப் பற்றி அக்கறை காட்டாத ஐ நா விலும் மேற்குலக நாடுகளிலும் நம்பிக்கை இழந்து விட்டோம். பிரித்தானியாவின் மனச்சாட்சியும் கடமை உணர்வும் எங்கே என்று வியக்கின்றோம். இழந்த தங்கள் நிலத்துக்கும் சுய ஆட்சிக் கோட்பாட்டிற்கும் போராடும் போராளிகளை பயங்கரவாதிகள் என்று பிரித்தானியாவால் தார்மீக ரீதியாக உயர் நிவையில் இருந்து கொண்டு கூறவும் முடியாது. அமெரிக்கா செய்ததது நாங்களும்செய்தோமென்றோ இந்தியாவின் தூண்டுதலால் ஐரொப்பிய ஒன்றியத்துட்ன் செய்தோ மென்றோ சாட்டுச் சொல்லவும் முடியாது.
இந்தியா இந்தப் பல்கொலை நிகழ்வுக்கு அரைவாசிப் பொறுப்போ அல்லது அதற்கும் கூடுதலான பொறுப்போ கொண்டுள்ளது. அது இலங்கைக்கு ஆயுத உதவி தொழில் நுட்ப உதவி ஆள் உதவி ஆகியவற்றை அளித்தது.
வுpடுதலைப் புலிகளை வென்று இலங்கை சனாதிபதியின் நேரடி ஆடசியன் கீழ் வடக்குக் கிழக்கில் மாகாண சபைகள் மூலம் தீர்வுவைக்கும் சதி ஒன்று நடக்குமானால் அது தமிழர் அபிலாசையாக அமையாது. விடுலைக்கான போராட்டம் தொடரும்.
ஈழத் தமிழர் தங்கள் சுய மதிப்பையும் இன ரீதியான தேசியப் பெருமையையும் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கிலுள்ள தங்கள் தேசியத் தாயகத்தையும் தாரைவார்க்க முடியாது என்பதே தமிழர் குரல்.
இந்நிகழ்வுகளின் மத்தியில் உலகளாவிய ரீதியில் அமெரிக்கச் செனட் சபையிலிருந்து ஐ நா பாதுகாப்புச் சபை வரை, கனடாவிலிருந்து லண்டன்வரை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தென் ஆபிரிக்காவரை டெல்கியிலிருந்து மற்றைய இடங்கள் வரை என்றுமில்லாதவாறு இலங்கைக்கு அழுத்தமும் அவதானிப்பும் நடப்பதாகவும் தாங்கள் விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்துள்ளதுபோல் தாங்களும் சற்றி வளைக்கப் பட்டுள்ளோமோ என்ற சந்தேகத்தை இலங்கையின் ஐ நா நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜெயத்திலக்க வெளிப்படுத்தி உள்ளார். அவதானிகளின் கருத்துப்படி ஈழத் தமிழருக்கு கொழும்புமேல் உள்ள கோபத்தைவிட இந்தப் போரை வழிநடத்தியவர்கள் மீதும் ஒத்தாசை புரிதவர்களின் மீதும்தான் கூடுதலாக உள்ளது என்று ஏசியன் அனலிஸ்ட் எழுதுகிறது.
தங்கள் உண்மையுள்ள
ந பாலசுப்பிரமணியம்
ஷேட் நிறுவனர்(SHADE)
No comments yet.