மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம் See you in Tamileelam !

By admin at 1 June, 2009, 1:06 pm

எமது நண்பர்கள் உறவினர்கள் போராட்டத்தில் மாவீரர் ஆனபோது நாட்டு பற்றாளர் ஆனபோது நாம் கனடா வந்தோம், சுயநலமாக வந்தோம் சரியான ஆளாக இருந்தால் நாமாக வந்தவுடனேயே ஏதாவது செய்திருப்போம், இல்லாவிட்டால் வீடு தேடி வந்த தொண்டர்களிட்கு சிரமம் ஏதும் இல்லாமல் எமது கடமையினை செய்து இருப்போம், ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் கருணாநிதி போல் காரணம் சொன்னோம்.
1994: case accept பண்ணட்டும் எதாவது செய்வோம்

1996: நல்ல வேலை கிடைக்கட்டும் பார்ப்பம்

1997: படிப்பு முடியட்டும் பார்ப்பம்

1998: citizen கிடைக்கட்டும் பார்ப்பம்
அம்மா அப்பா தம்பிட sponcer முடியட்டும் பார்ப்பம்
தங்கை கலியாணம் கட்டின பிறகு பார்ப்பம்
என்ர கலியாணம் முடிய பார்ப்பம்
பிறகு ..

தெரியும் தானே இப்பதான் கலியாணம் செய்தது

300 பேர் பெரிய செலவு - இப்ப ஏலாது பிறகு பார்ப்பம்
பிறகு .. மனுசீண்ட sponcer முடியட்டும் பார்ப்பம்

2003 :இப்பதானே சமாதானம் இப்ப என்ன செய்ய இருக்கு??

2006-2009 இப்ப தெரியும் தானே சடப்படி ஒன்றும் செய்யாக்கூடாது .. கோவிக்காதை.. பிறகு பார்ப்பம்
பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம் .. பிறகு பார்ப்பம்

இப்படி நல்ல காரணங்கள் நிறைய சொல்லும் கருணாநிதிகள் இதுவரை போராட்டத்துக்கு செய்த பங்களிப்பை அவர்களிகே சொல்ல சொல்லாடும்…
அவர்கள் மனசாட்சியே அவர்களை கொல்லும்…

எமது சகோதரர்கள் அங்கு மடிய நாம் இங்கு party போட்டோம்
Armyக்கு அடித்தால் உடனேயே Party..
உங்கள் party இல் சமைத்த ஆட்டுகறியிலும் போராளிகளின் தியாகம் தித்தித்தது
என்ன அருமை….
மாவீரர்களின் சதையில் கறி வைக்காததுதான் குறை.
இராணுவ ஆய்வில் விட்பனரானோம்.
Iqpal Athaas உம் Tharaki உம் உங்களிடம் பிச்சை எடுக்கவேணும்
அரசியல் கதைப்போம்…
விடிய விடிய முழித்திருந்து கதைப்போம்…
அடுத்தநாள் போன் அடித்து அதில் சிறு சிறு குறை கூறுவோம்…

தலைவர் செய்வார் மச்சான்
நீ ஒன்றும் செய்யாமல் சுயநலமா வீட்டில் இருக்க தலைவரும் போராளிகளும் எதாவது செய்ய வேணும்
இன்று தமிழர் படை அங்கு தோற்பது போல் ஒரு பயம் வந்ததும் முழிக்கிறோம் அழுகிறோம்
நெஞ்சு நோகுது வலிக்குது என்கிறோம்
ஆனால் பிரயோசனமாக என்ன செய்கிறோம்
இன்றும் கதை மட்டும் தான்.. கதை கதை கதை..
கடந்த மாதம் ஒட்டாவாவிக்கு உங்களுடன் வந்த நண்பர்கள் எந்தனை பேர்?
நீங்கள் ஒரு “பார்ட்டி” போட்டால் வருவது எத்தனை பேர்???
வராத நண்பர்களிடம் காரணம் கேளுங்கள்
University/ College Assignment வேலை மச்சான்
முக்கிய Meeting கட்டாயம் நிக்க வேணும்
அரசாங்க வேலை மச்சான் தெரியும் தானே
மதியம் வந்தனான் உன்னை கண்டனான் மச்சான் கதைக்க முடியல
புது வேலை மச்சான்
இப்பதான் vacation எடுத்தனான்
பிள்ளைக்கு வருத்தம் மச்சான் light fever
வரத்தான் day off எடுத்தனான் ஒருத்தரும் சேர்ந்து வர இல்லை
மனுசியோட பெரிய பிரச்சினை மச்சான்
சரி இப்படி கவன ஈர்ப்புக்கு வராததும் பருவாய் இல்லை வீட்டில் இருந்து எத்தனை கடிதம் எழுதினாய் என்று கேளுங்கள் …
ஒரு கடிதம் எழுத நேரம் இருக்காது ஆனால் எல்லா websites உம் போய் எல்லா செய்திகளையும் பார்க்க நேரம் இருக்கும்
டைம் இல்லை மச்சான்
வேலை களைப்பு மச்சான்
இப்படி நல்ல காரணங்கள் நிறைய சொல்லும் கருணாநிதிகள் இதுவரை போராட்டத்துக்கு செய்த பங்களிப்பை அவர்களிகே சொல்ல சொல்லாடும்…
அவர்கள் மனசாட்சியே அவர்களை கொல்லும்…
இந்த கருணாநிதிகளை முதலில் அடையாளம் காணுங்கள்
சுயநலவாதிகளை அடையாளம் காண்போம்
எதிரியிலும் சுயநலநண்பன் கெட்டவன்
இன்றைய அவலத்தில் மனம் மாறாதவன் என்றும் தானாக மனம் மாற மாட்டான்
ஒரு நாட்டின் அவலத்தில் பங்கு எடுக்காதவன் உங்கள் நண்பனாக இருந்தால் - அவன் உங்களிடம்
சுயநலத்துடன் தான் பழகுகிறான்

ஆனால் நீங்கள் அவர்களை ஒதுக்கினால் மட்டும் திருந்துவான்
நீங்கள் திருந்துங்கள்… அனைவரையும் திருத்துங்கள்
உங்கள் பங்களிப்பை இன்றிலிருந்து 100 வீதம் செய்யுங்கள்
தலைமையினை பலப்படுத்துங்கள்
எமது நாட்டினை நாமே கட்டி எழுப்புவோம்
வெள்ளை வந்து எமக்கு நாடு எடுத்து தர மாட்டான்
நாமே எமது பலத்தினை பலபடுத்துவோம்
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

“Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny” —Swamy Vivekananda- –

1.தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…

மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்…
“We shall meet again in Tamil Eelam”

See you in Tamileelam !

2.அன்பின் த‌மிழீழ‌ ந‌ன்ப‌ர்க‌ளே,
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்ட இன-அழிப்புப் படையெடுப்பில் 40,000 க்கு மேற்பட்ட‌ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 60,000க்கு மேற்பட்ட‌ தமிழர்கள் படுகாயமடைந்து உடல் ஊனமாக்கப்பட்டுவிட்டனர். 200,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறியுள்ள‌து.

வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நின்றது.

இப்போது, போரும் முடிந்து விடுமாம், புலிகளும் முடிந்து விடுவார்களாம்,‍ அதன் பின்னர் நல்ல தீர்வு வாங்கித் தருவார்களாம்.இந்த உலகத்தை நாங்கள் எப்படி நம்புவது?………… ஆனால் வேறு என்ன‌ தான் வ‌ழியிருக்கின்ற‌து?.

விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்தத் தொடங்கியிருக்கின்றோம்.

எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.

ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.

படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 40,000 தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;

எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;

எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்….

www.tamilaustralian.com
———————
“‘’ நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு” “– அலிஸ் முன்றோ

“வந்த ஊரில் வாழ்வை தொலைப்பதை விட
சொந்த ஊரின் சுடலையில் எரிவதேமேல்…!!!

அன்புடன்
தமிழ்ப்பொடியன்

Categories : Uncategorized

Comments
Sorubini October 24, 2009

People will realize what they have done and are doing if they read this. Hope it will amend their ways. Thanks SHADE.

Leave a comment