வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !
By admin at 7 January, 2010, 9:09 pm
வீர அஞ்சலி
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவன் நினைவாக பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும் சந்தித்தவன்!
எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும் வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில் வந்தால் இவன் மட்டும் உண்மையை சொலவான் என்று
தள்ளாத வயதிலும் சிங்கள அரசு தடுத்து வைத்த தன்மானப் புலி !
உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா !
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவன் வழியில் இன்னொரு சரித்திரம் படைத்தான் இவன் இன்று !
மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவனால் தலை நிமிர்வு பெற்றான்..
கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை சிந்திக்க வைத்தான்..
இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை கிழித்தான்..
பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை தந்தான்..
இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல் சொல்லிப் போனான்..
சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம் கண்டு தமிழ் மானம் காத்தான்..
உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று
உன் புகழை எதிர் காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவன் மரணத்தால்
உங்கள் ஊன் நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம் மனம்..
இவன் சிறையில் மரணிக்கும்வரை
மௌனம் காத்த உலகத்தின் கல்லறையில் கல்லறையில்
ஒரு தமிழன் உயிர் பெற்றான் என்று எழுதுங்கள்..
இவன் மரணம் மரணமல்ல
உலகிற்கு நாகரிகம் சொன்ன சங்கத் தமிழனின் மானம்
அவன் மரணத்தில் வீசுகிறது..
போரின் பின் வாடிய முல்லைப் பூக்கள் மறுபடி பூக்கின்றன…
கொட்டும் மல்லிகைப் பூக்கள் இவன் பாதங்களை தழுவுகின்றன..
சங்ககால வீர மரணம் தமிழீழத்தில் மறுபடி எழுகிறது..
உன் இறப்பாவது இந்த மானங்கெட்ட உலகிற்கு
ஒரு மரியாதை தரட்டும் !
போய் வா !
புறநானூறு உன் புகழ் பாடும் !
கிழப்புலியே உனக்கு வீர வணக்கம் !
விலை போனவன் போகட்டும்
மானமுள்ள தமிழர்கள் பூமியில் உள்ளவரை
உன் புகழ் முல்லைப்பாட்டாய் மணம் வீசும்..
உன் மகனின் புலிக்கொடி உன் உடலை மூடட்டும்..
தமிழனுக்கு தன்மானம் தந்தவனே போய்வா !
வீர வணக்கம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 86.
இராணுவத்தின் கொடிய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (06.011.2009) இரவு காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு இயற்கை மரணம் என்று ராணுவத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இறுதிப் போரின்போது, வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் மக்களுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துவிட்டனர். கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கடைசி வரை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வந்தது.
அதன்பிறகு இவர்களின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவல்கள் எதையும் இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. கொடிய சித்திரவதைகளை அந்த வயதான தாயும் தந்தையும் அனுபவித்ததாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் வேலுப்பிள்ளை நேற்று (06.01.2009) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலையாவது இலங்கை அரசு காட்டுமா, தமிழர்களிடம் ஒப்படைக்குமா? என்று தெரியவில்லை.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பற்றி எந்த தகவலும் இலங்ûகை ராணுவம் வெளியிடவில்லை.
No comments yet.