விடுதலைப் புலித் தடை என்ற குத்து மதிப்பு வேட்டு, தமிழரின் இன அழிப்புக்கு வழிவகுத்தது

By admin at 2 August, 2009, 11:29 am

“இன அழிப்பு என்பது, ஒருவரது மனித உரிமைக்கு விரோதமாக அல்லது அவர் சார்ந்த அமைப்பின் செயற்பாட்டு உரிமைக்கு விரோதமாகச் செயற் படுவது. இதுவே ஒரு பிரிவைச் சேர்ந்த அனைவரதும் மகத்துவத்தை மறுக்கும் பாரதூரமான அழிப்பின் உச்சநிலை. இப்படியான இன்னலின்போது வாழ்வுக்கு அர்தமே புரியாது போகும். ஓவ்வொரு தனிநபரும் அனுபவித்த கடும் வேதனைகளை ஒருங்கிணைக்கும் போது அந்த குற்றச் செயல்கள் ஏற்படுத்திய வரையறையற்ற பாரிய தாக்கத் தன்மை புரியும். அதை வெளிக்காட்ட இந்த மனிதப் பேரவல ஞாபகார்த்த மியூசியம் வழி வகுக்கிறது. நடந்தவற்றை மறந்தால் அதைத் திரும்பச் செய்யும் குற்றத்திற்து ஆளாகுவோம் என்று பன்முறை ஆணித்தரமாச் சொல்லப் பட்டுள்ளது.” மேரி றொபின்சன் அவர்கள் 1998 டிசெம்பர் 8ல் மானிடத்திற்கு எதிரான இன அழிப்புக் குற்றச் செயல்களும் தவிர்த்தலும் எச்சரிக்கைகளும் என்ற தலைப்பில் மனிதப் பேரவல ஞாபகார்த்த மியூசியத்திலஆரம்பமான மாநாட்டின் ஆரம்ப உரையில் கூறியது.

பல்நாட்டுச் சமூகம்;, மனிதப் படுகொலைகளினதும் சொல்லொண்ணாத் துயரங்களினதும் சாத்தியங்கள் தென்படும் சூழலில் கிடைக்கும் எச்சரிக்கைகளை உன்னிப்புடன் செவிமடுத்து, ஒரு அரசோ அல்லது ஒரு பகுதியினரோ மனிதக் கொலைகளைச் செய்யாது தவிர்க்க உருப்படியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் புதிய சகாப்தத்தினுள் நுழைந்தோம். நாங்கள் கண்ணால் கண்ட பாரிய மனித அல்லல்களை எம் எதிர்காலச் சந்ததியினர் காணாத நிலை ஏற்பட, வலுவும் செயலாற்றுத் திடமும் கொண்ட வழிவகைகள் உருவாக நீண்ட காலம் தேவை என்பழ இப்போது புரிகிறது.

1994ல் நடந்த ருவண்டா இன அழிப்பு, 1995ல் முன்னைய யோகோஸ்லாவில் நடந்த சிரபெனிக்கப் படுகொலை, ஆகியவை எம் அரசுகள்; இன அழிப்பை தடுத்து உயிர்களைப் பாதுகாக்காமல் விட்டதற்கான அண்மைய எடுத்துக் காட்டுக்கள். இலங்கையில் நடந்தது என்ன? பெயர்கள் மாறினாலும் தெளிவாகத் புலப்படும் மனித அவலமும் பல்நாட்டு சமூகத்தின் வேறுபட்ட செயலற்ற தன்மையும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

இன அழிப்புப் பாணி
வளரும் ஆதிக்க சக்திகள் வழங்கிய போர்க் கருவிகளையும் அவற்றிற்குத் தேவையான கணக்கற்ற கணைகளையும் பயன் படுத்தி வன்னியின் காடுகளிலும் கடற்கரைகளிலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களும், பத்தாயிரம் வரையிலான விடுதலைப் போராளிகளும் கொரூரமாகக் கொல்லப்பட்டார்கள். இது என்ன கத்திகளையும் அரிவாள்களையும் பயன்படுத்திய கொலையா? இல்லை தற்காலச் சக்தி வாய்ந்த கருவிகளின் செயற்பாடு. கூடுதலான படுகொலைகள், பல்குழல் ஏவுகணைத் துப்பாக்கிகள், கவச வாகனங்கள், குறிதவறாது தாக்கும் வான் குண்டுகள் போன்றவற்றால் நேர்ந்தவை. இலங்கை ஆயுதப் படை எந்தவித தண்டனைக்கும் ஆளாகாமல் இதைச் செய்துள்ளது. இந்த தண்டனைக்கு உள்ளாகாத படையினர் எந்த உயர்ந்த பதக்கச் சீருடை அணிந்தவர் ஆனாலும் அவரும் கொலையாளியே. இந்த இன அழிப்பை தடுக்காத கையாலாகாத் தன்மைக்கு திரும்பத் திரும்பக் கற்பித்த நியாயம் அனைத்தும் ஒரே ரகம்தான். “பொறுங்கள் இன்னும் முயைறயான இனவழிப்பு தொடங்கவில்லை. ஏங்களுக்கு உலகின் அந்தப் பகுதியில் உண்மையான தேசிய நலன் இல்லை. இது பயங்கர வாதத்தின் ஒரு வகை என்று உங்களுக்கத் தெரியும்தானே. இதயசுத்தியுடன் தம் சமூகத்தின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடுபவர்களையும் சேர்த்து நாங்கள் ஆயுதம் ஏந்திய அனைத்துக் குழுக்கழுக்கும் எதிராக பயங்கர வாத அழிப்புப் போர் பிரகடனம் செய்துள்ளோம்.”

பிரித்தானியா வாழ் தமிழர்

பி பி சியின் “ஹாட் ரோக்” நிகழ்ச்சியின்போது டெஸ் பிறவுண், ஸ்ரீபன் சாக்கருக்கு அளித்த பதில் பிரித்தானிய அரசின் செயற்பாடு சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நல்ல நம்பிக்கையை இனம் காட்டியிருக்கும். அந்த அரசை நம்பியிருந்த தமிழ் மக்களுக்கு எதிராக பின் புறத்தில் செயல் பட்டுள்ளதுடன் அதையே அது தொடருவதும் கவலைக்குரிய விடயம்.

இப்படியான வழிவகையை யுத்தத் தீர்வாகக் கொள்ள முடியாது. இது ஒரு பகுதியை முற்றாக அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நியாயம் அற்ற செயல். இந்தப் பின்னணியில் தமிழருக்க எதிரான போரில் பிரித்தானியாவின் ஒத்துழைப்பை வெளிக்கொணரும் லண்டன் எழுச்சிப் பிரசாரங்கள் முன் எப்போதையும் விட அதி முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தமிழ் நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்தியா சிங்கள அரசுக்கு, தேசியத் தலைவரும் பொட்டம்மானும் அழிக்கப் படும்வரை தன்னாலான அனைத்தையும் செய்தது. காரணம் விடுதலைப் புலிகள் ரஜீவ் காந்தியைக் கொன்றதைச் சொன்னாலும், உண்மையில் சமாதானப் படை என்ற பெயரில் வந்த இந்தியப் படையை அவமதித்ததே காரணம். இதை எம் கே நாராயணனும் சிவசங்கர் மேனனும் ஜனாதிபதி ராஜபக்சவுடனும் கோத்தபாயவுடனும் கொழும்பில் தேசியத் தலைவர் இறந்த அறிவிப்பின் மறுதினம் குதூகலிக்கும் விதத்தை அது சம்பந்தமாக வெளியான தொலைக் காட்சி வெளிக் கொணர்கிறது. ஆனால் இலங்கை அரசோ ஒரு பௌத்த சிங்கள அரசை நிறுவுவதற்காக நிரந்தரமாகவே தமிழர்களை வலுக்குன்றியவர்கள் ஆக்க விரும்புகிறது.

இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளாக சுய நிர்ணய உரிமைக்காக நடைபெறும் தமிழர்களின் போராட்டமும், அதை அடக்குவதற்காக ஏகாதிபத்தியம் கொடுக்கம் அனுசரணைகளும் இந்தத் தருணத்தில் கவனத்தில் கொள்வது ஒரு பயன் தரும் செயல். இந்தியாவினதும் மேற்குலகினதும் மறைமுக ஆதரவுடன் இலங்கை அரசின் முழு அளைவிலான இன அழிப்புக்கு முகம் கொடுத்து விடுதலைப் புலிகள் தமிழர் உரிமைக்காகப் போரிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் நல்ல பாடமும் படித்துள்ளோம். உரிமைக்காக எழுந்து நிற்க மறுத்தபோது நீ இறந்தாய். உண்மைக்காக எழுந்து நிற்க மறுத்தபோது நீ இறந்தாய். நீதிக்காக எழுந்து நிற்க மறுத்தபோது நீ இறந்தாய். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையும் முரண்பட்ட அரசியலைப் பார்த்தது. இலங்கையைப் பொறுத்த மட்டில் சிலருக்குள்ள பூகோள அரசியல் அபிலாசைகளைக் கண்டது. உண்மையில் கொள்கை வகுப்பாளர்கள் ஜி 8ன் நிகழ்ச்சி நிரலில் இலற்கையை உள்ளடக்காமல் விட்டது ஒரு வெட்கக் கேடு

எங்கள் இயலாமையையும் பொய்களை உள்வாங்கி அவற்றை நம்பும் எங்;கள் தன்மையையும் வைத்து நியாயப் படுத்துகிறார்கள், ஆனால் சிறுவர்கள் அவற்றின் உண்மை நிலையை அறியப்போகிறார்கள். கடசி மற்றையவர்கள் துயரில் கரிசனை காட்டும் சிறார்கள் என்ற முறையில் உண்மையை அறியப் போகிறார்கள். நான் பார்த்த தணிக்கை செய்யப்பட்ட ஒரு இணையத்தளத்தை அவதானித்த எனது நண்பன் ஒருவரின் 10 வயது மகன் ஓபாமாவிடம் அவர் மகள்மாரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென்று சொல்லுங்கள் அங்கிள் என்றான்.

Categories : Uncategorized


No comments yet.

Leave a comment