நிழல்
உதவி, மக்களாட்சி, மனித உரிமை, சமுதாயம், ஈழம் என்பனவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களின் வடிவமாகிய ‘ஷேய்ட’; என்னும் சொல்லின் தமிழாக்கமே இந்த நிழல் என்னும் சொல். வன்னியில் இயங்கு நிலை அரசொன்று நடந்துகொண்டிருந்த 2002லேயே தேசியத் தலைவரின் ஆசியுடனும் பலரின் அக்கறை வரவேற்புடனும் ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த அமைப்பு. தன் மேம்பாட்டுக்கு, பிரதானமாகப் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் உதவியில் தங்கியிருக்கும் சுயாட்சி நாடாக அரும்புவிடும் தமிழீழத்திற்கு, மனித உரிமை, மக்களாட்சி, உதவி ஆகிய மூன்னுமே இன்றியமையாத அம்சங்கள்.
சமூகம். (Society)
தாய்நாட்டிலிருந்து வந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களே இந்தச் சமூகம். நாங்கள் பொதுவாகவே, கடின உழைப்பும் விடாமுயற்சியும் அறிவுத் திறனும் கொண்டவர்கள். நாங்கள் மகத்துவமும் மதிப்பும் கொண்ட வெற்றிச் சமூகமாகக் கணிக்கப் படுபவர்கள். மற்றைய இனங்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றோம். எங்கள் சமூகத்தின் பிரதானமான பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் தேவையான கவனம் கொடுக்கின்றோம். எம் மக்களையும் மண்ணையும் மறக்காது எமது தாயக உறவகளின் உறவைப் பிரியாது காப்பாற்றும் பொறுப்புக் கொண்டவர்கள். எந்தகைய விமர்சனத்திற்கும் முகம் கொடுத்து, தொடர்புகளை ஏற்படுத்தி எமது போராட்டத்திற்கு புத்தொளி ஊட்டி புதிய பரிமாணம் கொடுப்போம்.
மனித உரிமைகள் (Human-Rights)
மனித உரிமை மதிப்பும், உண்மை நீதியும் அமைதி வாழ்வுக்கான முன் தேவைகள். முழுநிறைவான சிறந்த கொள்கைகள் செயலில் காட்டப்பட வேண்டும். மேற்குலகம் எப்பவுமே தங்களுக்கு ஏற்ற சுழலில்தான் மற்றைய நாடுகளின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும். மற்றைய சந்தர்ப்பங்களில் அவற்றைத் தட்டிக் கழித்துவிட்டு பேசாதிருக்கும்.
ஊதவி (Aid)
தமிழீழத்தில் தேவையானவர்களுக்கு உதவவேண்டிய கடமைப் பாடு எம் அனைவருக்கும் உண்டு. அவரவரின் சக்திக்கு ஏற்ப உதவுவதற்கு நம் அனைவராலும் முடியும்.
மக்களாட்சி (Democracy)
இது பெரும்பான்மையினரின் வசதிக்கு ஏற்பச் செய்யும் ஒன்றல்ல. சிறுபான்மைச் சமூகங்களுடன் ஒருங்கிணைந்து அமைதியாக வாழ அதன் அடிப்படைக் கொள்கைகள் கையாளப்பட வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் ஏமாளிகளாக தமிழர் வாழமாடடோம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். இந்தக் கடினமான உண்மையை உலக சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் புனித கடமை எங்களுடையது. ஊடகத் துறையினரால் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கவனத்துடன் தயாரிக்கப்படும் தகவல்களுக்கு இனியும் பலியாக எம்மால் முடியாதென்பதை உணர்ந்துள்ளோம். எங்கள் நோக்கான தமழீழத்தை அடைய நாங்கள் அர்த்தத்துடனும் தகுந்த அணுகுமுறையுடனும் செயற்பட வேண்டும். எங்களுக்குள்ள அச்சுறத்தல்களை நாங்கள் உலகிற்கும் தமிழீழ எதிர்ப்புக் கொள்கை தமிழருக்கம் புரிய வைக்க வேண்டும். அவர்களுடனும் நாங்கள் செயற்பட வேண்டியவர்கள்.
ஈழம் (Eelam)
ஈழத்திற்காக நாம் அர்த்தமுள்ள வழியில் உறுதியுடன் செயற்பட வேண்டும். நாங்கள் உலகத்திற்கும் தமிழ் ஈழத்தை விரும்பாத தமிழர்களுக்கும் எங்கள் ஆதங்கங்களை விளக்க வேண்டும். அவர்களை யும் எம்முடன் இணைக்க வேண்டும். இதுதான் எமது இலக்கு, ஆன்மீகம், அடையாளம் ஆகியன. சுருங்கச் சொல்வதானால,; எமது பிள்ளைகள், சகோதர சகோதரிகள் ஆகிய வீரமிக்க போராளிகள் மனமுவந்து அளித்த அர்ப்பணிப்புக்களையும் மறக்க முடியாது. இது நாம் அணுகவேண்டிய ஒரு சவால்.
இது ஒரு மிகவும் முக்கிய தகவல் (2009 ஏப்ரல்)
இப்போது நாங்கள் செய்வது முறையாக வகுக்கப்படாத ஒரு கோரிக்கை. சொல்லளவில் போரை நிறுத்து இன அழிப்பை நிறுத்து போன்றவை.
குற்றவாளிகளாக இந்தியாவும் பிரித்தானியாவும் உள்ள நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. போர் நிறுத்த ஏற்பாட்டிற்கு உரிமைகோரப் பலர் வருவார்கள். இதில் தொழிற் கட்சியினரே முன்னுக்கு நிற்பார்கள்.
நீண்ட பார்வை கொண்ட செயற்திறன் கொண்ட திட்டம் எமக்கு வேண்டும். ( நன்கு சிந்தித்து தயாரிக்கப்பட்ட முன்மொழிவே இந்த நகல்.)
முதலில்
- நிபந்தனை அற்ற உடனடியான நிரந்தரமான போர் நிறுத்தம்
- ஊடகங்களும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் உள்ளே அனுமதிக்கப்படல்
இரண்டாவதாக
ஓரு சிலரைத் தவிர மற்றைய எல்லாச் சிங்கள மக்களினதும் ஆதரவுடன் அரசு இந்த இன அழிப்பைச் செய்வதைப் பார்த்தால், எப்பவுமே தமிழர் ஒரு நியாயமான தீர்வை எந்த அரசிட மிருந்தும் பெற முடியாது. ஆகையால் இயல்பாகவே எமக்கு பிரிவு தேவை. (பிரிவினை) ஐக்கிய நாடுகள் சபையும் பல்நாட்டுச் சமூகங்களும் அரசியல் தீர்வை விரும்பும் பட்சத்தில் எங்கள் இன்றியமையாத நிபந்தனையுடன் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கலாம். கீழ்க் கூறப்படுபவற்றை எவ்வித நிபந்தனையும் அற்று இலங்கை அரசு ஏற்கவேண்டும்.
1. தமிழர் ஒரு தனி இனம்
2. வடக்கும் கிழக்கும், வரலாறும் பாரம்பரியமும் கொண்ட தமிழர் தாயகம்
3. தங்கள் உரிமையான சுய நிர்ணய உரிமையை தமிழர் பெறவேண்டும்
4. ஒற்றையாட்சி கோட்பாட்டை இலங்கையும் இந்தியாவும் கைவிட்டு அத்துடன் இலங்கை விடுதலைப் புலிகள் மட்டுமே தனிப் பிரதிநிதிகள் என்பதை ஏற்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா, பிரித்தானியா ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் அரசியற் பேச்சுவார்த்தை ஒரு சுமூக முறையில் நடக்க வேண்டும்.
மூன்றாவதாக
அப்படியும் ஆறு மாதத்திற்குள் அரசியல் தீர்வு படிவளர்ச்சி பெறாவிட்டால் தமிழர் ஒருதலைப்பட்ச சுயாட்சிப் பிரகடனம் செய்வார்கள், பல்நாட்டுச் சமூகமும் அதற்கு ஆதரவளிக்கும்.
“நிழலின் பேரவா தமிழ் ஈழத் தாயகம!”
தயாரித்தவர் திரு நடா பாலசுப்பிரமணியம்.
(E-mail nadabala65@yahoo.co.uk)
கருத்துக்கள் வரவேற்கப் படுகிறது.
தயவுசெய்து எங்களுடன் இணையுங்கள்.















